மார்த்தாண்டம் கடைகளில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


மார்த்தாண்டம் கடைகளில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:15 AM IST (Updated: 2 Oct 2019 9:45 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் கடைகளில் இருந்து 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை பாதுகாப்பான முறையில் அழித்தனர்.

குழித்துறை,

குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்ரீஜேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் மார்த்தாண்டம் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் 40–க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.

அந்த கடைகளில் இருந்து 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை பாதுகாப்பான முறையில் அழித்தனர். மேலும் 4 கடைகளுக்கு மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.


Next Story