பல ஆண்டுகளாக சீரமைக்காததால் சேறும், சகதியுமாக காணப்படும் சாலையில் நாற்று நடும் போராட்டம்
பல ஆண்டுகளாக சாலை சீரமைக்காததால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதையடுத்து அந்த சாலையில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் நாற்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த நீலகிரி ஊராட்சியில் உள்ளது மல்லிகை புரம். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலைகளில் உள்ள கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் மழைகாலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகின் றன. இந்த நிலையில் ஆங்காங்கே சாலையில் குழி தோண்டியதால் தற்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது.
நாற்று நடும் போராட்டம்
இதைக்கண்டித்து், சாலையை உடனடியாக சீர் செய்து தார்சாலையாக மாற்றித்தரக்கோரி தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் நேற்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நிறுவனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜீவரத்தினம், பொருளாளர் விஜய், துணை பொருளாளர் கலியபெருமாள், துணைத்தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் ஆண்ட்ரூஸ், மாவட்ட தலைவர் அய்யாவு, நகர துணை செயலாளர் வடிவேல், காமராஜ், நிர்வாகிகள் ராமசாமி, அன்பழகன், குணாளன் உள்பட பலர் கலந்து கொண்டு நாற்றுகளை நட்டனர்.
சீரமைக்க வேண்டும்
மல்லிகை புரம் பகுதியில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து தராவிட்டால், அடுத்தகட்டமாக கழிவுநீர் கொட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று நிறுவனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story