தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:15 AM IST (Updated: 4 Oct 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கல்லூரியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். கஜா புயலின் போது கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்கள் கட்டிடங்கள் மீது சாய்ந்து சேதம் அடைந்தன. இதனை சீரமைக்கக்கோரி கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்லூரியில் சிற்றுண்டிவசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story