மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 3 Oct 2019 10:45 PM GMT (Updated: 3 Oct 2019 8:17 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளியை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளியை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் 2-ம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் கபிலன், பள்ளி தலைமை ஆசிரியர் சிவசக்திவேல், ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்தில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,568 பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த நாளில் 2-ம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் வழங்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் எண்ணற்ற பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். அனைத்து தரப்பு மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசால் செயல்படுத்தக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைந்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story