டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்க மாட்டோம் மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்க மாட்டோம் மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 Oct 2019 4:00 AM IST (Updated: 7 Oct 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்க மாட்டோம் என மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மன்னார்குடி,

மன்னார்குடியில் மருந்து வணிகர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மருந்து வணிகர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் சீனிவாச ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகப்பன், சில்லரை மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் பாபு, மாவட்ட பொருளாளர் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர் அசோக்குமார், ஓய்வு பெற்ற மருத்துவத்துறை இயக்குனர் செங்குட்டுவன், மன்னார்குடி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோவிந்தராஜ், மருந்துகள் ஆய்வாளர் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பரிந்துரை சீட்டு

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சாதாரண காய்ச்சல் என வருபவர்களுக்குகூட டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ய மாட்டோம். அவ்வாறு வரும் வாடிக்கையாளர்களை உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதிக்கும்படி அறிவுறுத்துவது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு மருந்து வணிகர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தாலுகா முழுவதும் 75-க்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story