நெல்லையில் பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்


நெல்லையில் பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:00 PM GMT (Updated: 9 Oct 2019 8:28 PM GMT)

நெல்லையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை, 

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலைக்குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் நிலைக்குழு தாசில்தார் ராஜசேகரன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த டிராக்டர் ஷோரூம் உரிமையாளரான கண்ணன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் இருந்ததும், அதை வங்கியில் செலுத்த எடுத்து சென்றதும் தெரிந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து நிலைக்குழு தாசில்தார் ராஜசேகரன் அந்த பணத்தை பறிமுதல் செய்து தாசில்தார் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story