மாவட்ட செய்திகள்

பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல் + "||" + Farmers can register in the Prime Minister's Honor Fund Program Information from the Joint Director of Agriculture

பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறினார்.
அரியலூர்,

பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள் சேர்க்கப்பட்டு தற்போது பயன் பெற்று வருகின்றனர். இதில் ஏற்கனவே பதிவு செய்துள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள், சேர்க்கப்படாமல் விடுபட்டு இருந்தால் அவர்கள் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்திற்கு சென்று www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். கணினி விவரம் தெரிந்த விவசாயிகள் தாங்களாகவே www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் பார்மர்ஸ் கார்னர் என்ற ஆப்சனில் சென்று நியூ பார்மர் ரிஜிஸ்ட்ரேசன் எனும் ஆப்சன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


திருத்தம் செய்யலாம்

இத்திட்டத்தில் ஏற்கனவே இணைந்த விவசாயிகளில், முதல் 2 தவணை நிதி பெற்றவர்கள் சிலருக்கு 3-வது தவணை வரவு வைக்கப்படாமல் இருந்தால், தங்களது பெயரை ஆதார் அட்டையில் உள்ளபடி www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் பார்மர்ஸ் கார்னர் என்ற ஆப்சனில் சென்று எடிட் ஆதார் டீடைல்ஸ் எனும் ஆப்சன் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம். இதை தாங்கள் அல்லது பொது இ-சேவை மையத்தில் சரிபார்த்து திருத்தம் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் விவரங்கள் சரியாக பொருந்தியிருந்தால் மட்டுமே 3-வது தவணை நிதியானது விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
2. வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 15-ந் தேதி வரை நீட்டிப்பு கலெக்டர் டி.ஜி.வினய் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 15-ந் தேதி வரை நீட்டிப்பு கலெக்டர் டி.ஜி.வினய் தகவல்.
3. சேலத்தில் சுகாதார தூதுவர்களாக மாணவர்களை நியமிக்க நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் தகவல்
சேலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சுகாதார தூதுவர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீ‌‌ஷ் தெரிவித்துள்ளார்.
4. மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த இலவச மருந்து அதிகாரிகள் தகவல்
மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த இலவச மருந்து வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5. கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 3 மடங்கு குறைந்துள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு 3 மடங்கு குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...