புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
21 மாத நிலுவை தொகை
தொகுப்பூதியம், மதிப்பூதியம் முறைகளை மாற்றிட வேண்டும். 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியம் ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் சிவக்குமார், குமார், மூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளர்கள் தனபால், மணிவண்ணன், செந்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகரன், சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story