மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 16-ந் தேதி நடக்கிறது + "||" + District level carrom competitions for school students are being held on the 16th

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 16-ந் தேதி நடக்கிறது

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 16-ந் தேதி நடக்கிறது
பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2019-20-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய 2 பிரிவுகளில் கீழ்க்கண்டுள்ள படி நடைபெற உள்ளது.


இளநிலைப் பிரிவு, மழலை வகுப்பு 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளும், முதுநிலைப் பிரிவு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளிலும் வருகிற 16-ந் தேதி காலை 9 மணி முதல் கேரம் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஆன்லைனில் பதிவு

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஆன்லைனை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் வருகிற 15-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். கேரம் போட்டிகளில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒற்றையர் பிரிவில் 7 மாணவர்களும், 7 மாணவிகளும், இரட்டையர் பிரிவில் 5 மாணவர்கள் அணி மற்றும் 5 மாணவிகள் அணிகளும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து, தாங்கள் எந்த வகுப்பில் பயில்பவர் என்பதற்கான சான்றினை பெற்றுவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 1,200 மாணவிகள் பங்கேற்பு
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டம் நல்லானூரில் நேற்று தொடங்கியது. இதில் 1200 மாணவிகள் பங்கேற்றனர்.
2. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கான குழு போட்டிகள்
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
3. நாகர்கோவிலில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி
நாகர்கோவிலில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது.
4. பள்ளி கல்வித்துறை சார்பில் சேலத்தில் மாநில கலைவிழா போட்டிகள்
பள்ளி கல்வித்துறை சார்பில் சேலத்தில் மாநில அளவிலான கலைவிழா போட்டிகள் நடைபெற்றது.
5. தேவகோட்டையில் விளையாட்டு போட்டிகள்
தேவகோட்டையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.