மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு + "||" + Special worship at the Perumal temples on Saturday

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி திருச்சியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது.
திருச்சி,

புரட்டாசி மாதத்தில் இந்துக்களில் பலர் பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். அதிலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையாகும். இதையொட்டி திருச்சியில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோவில், கே.கே.நகர் சுந்தர்ராஜ பெருமாள் கோவில், தென்னூர் பட்டாபிராமன் ரோட்டில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆஞ்சநேயர் கோவில்

இதேபோல் பக்தர்கள் மற்றும் உலக நன்மைக்காக கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு நேற்று ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. மூலவர் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.மேலும் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில், பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பூரி ஜெகநாதர் கோவிலில் அமித்ஷா வழிபாடு
பூரி ஜெகநாதர் கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வழிபாடு செய்தார்.
2. ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள்- தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
3. அரியலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு திரளானவர்கள் கலந்து கொண்டனர்
அரியலூர் மாவட்டத் தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
4. ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள் - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
கரூரில் புத்தாண்டு தினத்தையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள்- கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
5. புத்தாண்டையொட்டி கோவில்- கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.