மாநில கராத்தே போட்டி 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
தண்டர் விளையாட்டு கழகம், தண்டர் யோகா மையம், தஞ்சை டெல்டா ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி மற்றும் யோகாசன போட்டி தஞசையில் நேற்று நடந்தது.
தஞ்சாவூர்,
தண்டர் விளையாட்டு கழகம், தண்டர் யோகா மையம், தஞ்சை டெல்டா ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி மற்றும் யோகாசன போட்டி தஞசையில் நேற்று நடந்தது. கராத்தே போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். செய்து காண்பித்தல், சண்டை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆடவர், மகளிருக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
அதேபோல் யோகாசன போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் 380 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தண்டர் விளையாட்டு கழக நிறுவனர் பொய்யாமொழி, செயலாளர் சித்தார்த்தன், தலைமை பயிற்சியாளர் எட்வின் இன்பராஜ், தண்டர் யோகா மைய செயலாளர் விக்கி, தலைவர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story