மது விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மனு


மது விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 13 Oct 2019 10:45 PM GMT (Updated: 13 Oct 2019 9:05 PM GMT)

குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று குளித்தலை போலீஸ் நிலையத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.

குளித்தலை,

குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று குளித்தலை போலீஸ் நிலையத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கருங்கலாப்பள்ளியில் ஏற்கனவே இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் இங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. இந்தநிலையில் தற்போது கருங்கலாப்பள்ளியில் உள்ள அரசு பள்ளி மற்றும் வாய்க்கால்கரை ஆகிய 2 இடங்களிலும் அனுமதியின்றி மது விற்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். எனவே இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர். முன்னதாக மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.

Next Story