குன்னத்தில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


குன்னத்தில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Oct 2019 4:15 AM IST (Updated: 16 Oct 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.

குன்னம்,

குன்னத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் தலைமையில், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார துறையினர் பஸ்நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், இறைச்சி கடைகள், ஓட்டல்களில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மொத்தம் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளின் உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். இந்த சோதனையின் போது, சுகாதார ஆய்வாளர் கந்தசாமி, ஊராட்சி செயலாளர் ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story