மாவட்ட செய்திகள்

வெண்ணாற்றில் வாலிபர் பிணம் கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை + "||" + Was the corpse of the youth killed in butter? Police are investigating

வெண்ணாற்றில் வாலிபர் பிணம் கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை

வெண்ணாற்றில் வாலிபர் பிணம் கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை
தஞ்சை வெண்ணாற்றில் வாலிபர் பிணம் கிடந்தது. அவரை யாரும் கொலை செய்து ஆற்றில் வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,

தஞ்சை பள்ளிஅக்ரகாரம் வெண்ணாற்றில் நேற்று காலை புதரில் ஆண் பிணம் கிடந்தது. பிணமாக கிடந்தவருக்கு 30 வயது இருக்கும். அவர் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த நிலையில் கிடந்தார். நேற்று காலை அந்த பகுதிக்கு குளிக்க சென்றவர்கள் வாலிபரின் பிணம் கிடப்பதை பார்த்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆற்றில் பிணம் கிடப்பது அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீசார் விசாரணை

மேலும் பிணமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. அவர் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து பிணத்தை ஆற்றில் வீசி சென்றனரா? என தெரியவில்லை.

இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கு - 11 தனிப்படைகள் அமைப்பு
திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
2. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
3. சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை
சீர்காழியில் ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை
வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வர போலீசார் தடை விதித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
5. காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.