வலங்கைமான் அருகே, நடுரோட்டில் சென்ற வேன் தீரென தீப்பற்றி எரிந்தது
வலங்கைமான் அருகே நடுரோட்டில் சென்று கொண்டிந்த வேன் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.
வலங்கைமான்,
கடலூர் மாவட்டம், எய்யலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதிக்கு இல்ல நிகழ்ச்சிக்காக வேனில் வந்தனர். நேற்று முன்தினம் இரவு அதே வேனில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனை ராஜா ஓட்டினார். வேன் அந்த பகுதியை சேர்ந்த ராஜாவின் நண்பருடையது என்று கூறப்படுகிறது.
நீடாமங்கலத்தை அடுத்த கொட்டையூர் என்ற இடத்தில் சென்றபோது திடீரென்று நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்தது.
மேலும் வேன் முழுவதும் தீ பரவி எரிய தொடங்கியதால் அதில் பயணம் செய்த அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர். ஆனால் சிறிது நேரத்திலேயே வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. இருப்பினும் இந்த பகுதி கிராம மக்கள் தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாயகம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுதொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story