தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா எங்கள் கட்சியினரின் செயல்பாட்டை முடக்குகிறார்கள்; காங்கிரஸ் குற்றச்சாட்டு


தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா எங்கள் கட்சியினரின் செயல்பாட்டை முடக்குகிறார்கள்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Oct 2019 4:44 AM IST (Updated: 19 Oct 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினர் எங்கள் செயல்பாட்டை திட்டமிட்டு முடக்குகிறார்கள் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபையின் 288 தொகுதிகளுக்கு வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி தலைவர்களும், எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரத்திற்காக பயணம் செய்யும் ஹெலிகாப்டர், ஜெட் விமானங்களுக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் அனுமதி வழங்க மறுக்கின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுகின்றனர். பா.ஜனதா எங்கள் கட்சி தலைவர்களின் செயல்பாட்டை முடக்க விரும்புகிறது.

நான் கடந்த வியாழக் கிழமை முதல் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுடன் விமானத்தில் செல்ல அனுமதி கிடைக் காமல் சோலாப்பூர் விமான நிலையத்தில் தவிக்கிறேன் இதற்கு பிரதமர் மோடி வருகை காரணமாக கூறப்பட்டது. இன்று எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது.

இதுகுறித்து மராட்டிய பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்யாய் கூறுகையில், “ காங்கிரஸ் ஆட்சியின்போதும் முக்கிய பிர முகர்கள் பயணம் காரணமாக விமானம் தாமதமானதால், எங்கள் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அமோல் காலே புனே மாவட்டத்தில் போசாரி, பிம்பிரி மற்றும் சின்ச்வாட் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்த நிலையில், பிரதமர் வருகை காரணமாக ஹெலிகாப்டருக்கு அனுமதி கிடைக்காததால் அவருடைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story