பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி
மராட்டிய சட்ட சபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் என நாக்பூரில் வாக்களித்த பின்னர் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
நாக்பூர்,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்ட சபைக்கு நேற்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காலையிலேயே வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டினார் கள். மத்திய மந்திரி நிதின் கட்காரி நாக்பூரில் தனது மனைவியுடன் வந்து ஓட்டுப்போட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், “மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநிலத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் 5 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளை வைத்து மக்கள் வாக்களிப்பார்கள்.
பா.ஜனதா - சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும். பட்னாவிஸ் மீண் டும் முதல்-மந்திரி ஆவார்” என்றார்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் 5-வது முறையாக களத்தில் உள்ளார். அவர் நேற்று தனது மனைவி அம்ருதா பட்னாவிஸ் மற்றும் தாயுடன் நாக்பூர் தர்மாபேத் பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து வாக்களித்தார்.
பின்னர் அவர் கூறுகை யில், “நம்முடைய கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் அரசை நாம் தேர்வு செய்வோம். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பானது. அந்த எதிர்பார்ப்புகள் வாக்களிக்கும் ஒவ்வொருவரின் முதல் உரிமை” என்றார்.

Related Tags :
Next Story