வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Oct 2019 10:30 PM GMT (Updated: 22 Oct 2019 6:53 PM GMT)

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது.தஞ்சையில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் தஞ்சை தெற்கு வீதியில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன உதவி தலைவர் சொக்கலிங்கம், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த சுப்புராமன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌‌ஷங்களும் எழுப்பப்பட்டன.

முடிவில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன உதவி தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார். ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் தஞ்சையில் பல வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Next Story