கடந்த தேர்தலை விட புனே மாவட்டத்தில் 3 சதவீத வாக்குப்பதிவு குறைந்தது நகர்புறத்தில் வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை

புனே மாவட்டத்தில் 57.69 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலை விட 3 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் குறைந்தது.
புனே,
புனே மாவட்டத்தில் 57.69 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலை விட 3 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் குறைந்தது. இதில் நகர் புறத்தில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்தது.
57.69 சதவீதம்
மராட்டிய சட்டசபை தேர்தல் நேற்றுமுன் தினம் நடந்தது. இதில் புனே மாவட்டத்தில் உள்ள 21 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. குறிப்பாக புனே நகரை விட புறநகர் பகுதிகளில் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
புனே மாவட்டத்தில் உள்ள 21 தொகுதிகளில் 57.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புனே மாவட்டத்தில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சுமார் 3 சதவீதத்துக்கும் மேல் வாக்குப் பதிவு குறைந்து உள்ளது.
தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-
புனே நகர்
வட்காவ் சேரி - 46.92, சிவாஜிநகர் - 43.96, கோத்ருட் - 48.17, கடக்வாசலா - 51.35, பார்வதி - 48.98, ஹடாப்சர் - 47.25, புனே கன்டோன்மென்ட் (தனித்தொகுதி)-43.28, கஸ்பா பேத் - 51.54.
பிம்பிரி-சின்ஞ்வாட் மாநகராட்சி பகுதி:-
சின்ஞ்வாட் - 53.59, பிம்பிரி - 50.17, போசரி - 59.63.
புனே புறநகர் தொகுதிகள்
ஜூன்னார் - 67.33, அம்பேகாவ் - 66.77, கேட் அலாந்தி - 67.27, ஷிருர் - 67.21, தாவுன்ட் - 68.71, இந்தாப்பூர் - 75.92, பாராமதி - 68.38, புரந்தர் - 65.56, போர் - 62.93, மாவல் - 71.16.
புனே மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக இந்தாப்பூரில் 75.92 சதவீதமும், குறைந்தபட்சமாக புனே கன்டோன்மென்ட் தொகுதியில் 43.28 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story