குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு


குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2019 3:30 AM IST (Updated: 23 Oct 2019 8:05 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை கைவிட வேண்டும் எனக்ே்காரி நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தின.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் வங்கி கிளை ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து வங்கி கிளைகளின் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

பணபரிவர்த்தனை முடக்கம்

இதனால் பெரும்பாலான வங்கிகளில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. ஒருசில வங்கிகள் பூட்டிக்கிடந்தன. ஆனால் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். சில வங்கிகளில் அதிகாரிகள் மட்டும் அமர்ந்திருந்து காசோலை பரிவர்த்தனைகளை மேற்ெ்காண்டனர். இதனால் வங்கியில் பணம் செலுத்தவும் முடியாமல், பணம் எடுக்கவும் முடியாமல் கணக்குதாரர்கள், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். இதனால் வங்கிகள் மூலமான பண பரிவர்த்தனை நேற்று முற்றிலும் முடங்கியது.

ஆர்ப்பாட்டம்

இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தையொட்டி நாகர்ே்காவில் பால்பண்ணை சந்திப்பு பகுதியில் உள்ள கனரா வங்கி முன் நேற்று வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார்.

சங்க மாவட்ட தலைவர் ரகுநாதன், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

650 பேர் பங்கேற்பு

பின்னர் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சிதம்பரம் கூறியதாவது:-

இன்று (நேற்று) நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குமரி மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.), ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஊழியர்களைத்தவிர மற்ற 250 வங்கிகளின் கிளைகளைச் சேர்ந்த 650 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். எனவே ஐ.ஓ.பி., எஸ்.பி.ஐ. வங்கி கிளைகள் மட்டும்தான் முழுமையாக செயல்பட்டன. மற்ற வங்கிகளின் கிளைகள் செயல்படவில்லை. அதிகாரிகள் மட்டும்தான் பணிக்கு சென்றிருந்தார்கள். இந்த போராட்டத்தால் குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story