தீபாவளி போனஸ் வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் 2-வதுநாளாக உண்ணாவிரதம்


தீபாவளி போனஸ் வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் 2-வதுநாளாக உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே தனியார் மின் உற்பத்தி நிலைய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் 2-வதுநாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகூர்,

நாகூர் அருகே ஒக்கூரில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் உடனே வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ தொழிற் சங்கம் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்றுமுன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நேற்று 2-வதுநாளாக நடைபெற்றது. உண்ணாவிரதத்தை சி.ஐ.டி.யூ. நாகை மாவட்ட துணைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மாரிமுத்து தொடங்கி வைத்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. தொழிற் சங்க தலைவர் அண்ணாதுரை, பொருளாளர் மோகன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பக்கிரிசாமி, செயலாளர் கலைஞர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட கவுன்சில் செயலாளர் சேரன் செங்குட்டுவன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனி மணி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கோ‌‌ஷங்கள்

ஒக்கூரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனசை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப் பட்டன.

இதில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்க உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story