குமரி மாவட்டத்தில் மழை: பெருஞ்சாணி, சிற்றார்-1 அணைகளில் இருந்து 1,041 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெருஞ்சாணி, சிற்றார்-1 அணைகளில் இருந்து வினாடிக்கு 1,041 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்்த கனமழை தற்போது குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் சில இடங்களில் மட்டும்தான் மழை பெய்திருந்தது. ஆனாலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து இருந்து வருகிறது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
மழை அளவு
பெருஞ்சாணி- 6.6, புத்தன் அணை- 6.2, சிற்றார் 2- 4, களியல்- 1.6, குழித்துறை - 3.6, சுருளக்ே்காடு- 3, அடையாமடை- 5, திற்பரப்பு- 23.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 596 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 504 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 506 கன அடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 12½ கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 52 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு 5 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.
உபரிநீர் வெளியேற்றம்
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்திருப்பதைத் தொடர்ந்து இந்த அணையில் இருந்து வினாடிக்கு 537 கன அடி தண்ணீரும், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து பெருஞ்சாணி அணைக்கு வரும் 504 கன அடி தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை நிரம்பியதை அடுத்து இந்த அணைக்கு வரும் 52 கன அடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்படுகிறது. முக்கடல் அணை நிரம்பியதை அடுத்து இந்த அணைக்கு வரும் 5 கன அடி தண்ணீர் உபரிநீர் கால்வாய் மூலம் திறந்து விடப்படுகிறது.
இந்த மழையினால் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 11 வீடுகளும், தோவாளை தாலுகா பகுதியில் 7 வீடுகளும், விளவங்கோடு தாலுகா பகுதியில் 4 வீடுகளும் ஆக மொத்தம் 22 வீடுகள் இடிந்து விழுந்ததாக வருவாய்த்துறை அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story