வீட்டில் பதுக்கி வைத்திருந்த 185 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் தாய், மகன் உள்பட 3 பேர் கைது


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 185 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் தாய், மகன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 185 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தாய், மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் ஒரு வீட்டில் முறைகேடாக கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் மதுவிலக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டபோது, வீட்டில் விற்பனை செய்வதற்காக 185 போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சேலத்தை சேர்ந்த மணிவேல் (வயது 25), அவரது தாய் பூங்கொடி (48) மற்றும் சங்ககிரியை சேர்ந்த மயில்சாமி (28) ஆகிய 3 பேர் மீது மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 185 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story