படப்பையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை விரிசலால் அச்சம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


படப்பையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை விரிசலால் அச்சம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2019 3:45 AM IST (Updated: 24 Oct 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

படப்பை ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை விரிசல் ஏற்பட்டு பழுதடைந்துள்ளதால் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள படப்பை ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதிமக்கள் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இதற்கிடையே இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்துவிட்டதால் பழுதடைந்து காணப்படுகிறது. மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் கட்டிடத்தின் மேற்கூரை வழியாக அலுவலகத்துக்குள் மழைநீர் உள்ளே வருகிறது.

மேலும், இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர். மழைக்காலங்களில் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலையே உள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பலமுறை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் கட்டிடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Related Tags :
Next Story