செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.86 ஆயிரம் சிக்கியது
செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.86 ஆயிரம் சிக்கியது.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அதிகாரி நடராஜன், போக்குவரத்து ஆய்வாளர்கள் சரவணன், செல்வராஜ், தரகர் ருத்திரகோட்டி ஆகியோரிடம் விசாரித்தனர்.
அப்போது அங்கு இருந்த தரகர்கள் சரவணன், ஜெகன், நாராயணன் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது கணக்கில் வராத ரூ.86 ஆயிரம் சிக்கியது.
சென்னை எஸ்பிளனேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேஷ்கண்ணா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று மாலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ராஜேஷ்கண்ணாவின் அலுவலகத்தில் புகுந்து திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் கிடைத்தது.
மேலும் ராஜேஷ்கண்ணாவை பார்ப்பதற்காக சுப்பிரமணியன் என்ற பட்டாசு கடை அதிபர் வந்திருந்தார். அவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் ரூ.1½ லட்சம் இருந்தது. அந்த பணத்தை பட்டாசு கடை உரிமம் வழங்குவதற்காக அதிகாரி ராஜேஷ்கண்ணாவுக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ராஜேஷ் கண்ணாவிடம் விசாரித்தபோது, தான் பட்டாசு கடை அதிபரிடம் பணம் எதுவும் கொண்டுவர சொல்லவில்லை என்று மறுத்ததாக தெரிகிறது. இதனால் ராஜேஷ்கண்ணாவிடமும், பட்டாசு கடை அதிபர் சுப்பிரமணியத்திடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரவு 9 மணி தாண்டியும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோல் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் பரிசு பொருட்கள் பெறுவதாக வந்த தகவலையடுத்து அம்பத்தூர் ராம்நகரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையில் 3 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
சார் பதிவாளர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை மூடிய அதிகாரிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் சோதனை செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்துக்கு உரிய ஆவணங்களை காட்டிவிட்டு அவற்றை பெற்றுக்கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவிலும் இந்த சோதனை நீடித்தது.

Related Tags :
Next Story