மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏ.சி., கம்ப்யூட்டர் எரிந்து சேதம் + "||" + Kancheepuram At the Central Co-operative Bank Fire accident

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏ.சி., கம்ப்யூட்டர் எரிந்து சேதம்

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏ.சி., கம்ப்யூட்டர் எரிந்து சேதம்
காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த, ஏ.சி., கம்ப்யூட்டர் தீயில் எரிந்து சேதம் ஆனது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ளது காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை. நேற்று காலை வங்கியின் மேலாளர் ரவீந்திரன் வங்கியின் கதவை திறந்தார். அப்போது வங்கியில் புகைமூட்டம் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து அவர் காஞ்சீபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி முரளி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து புகைமூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.


இருப்பினும் தீ விபத்தில் வங்கியில் இருந்த ஒரு கம்ப்யூட்டர், இன்வெர்ட்டரில் இயங்கும் 2 பேட்டரிகள், ஒரு ஏ.சி. போன்றவை தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், உதவி பொது மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தார்கள்.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம், திருமழிசையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை
காஞ்சீபுரம், திருமழிசையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
2. காஞ்சீபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் சாவு: கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
காஞ்சீபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
3. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் - விநாயகர் சதுர்த்தி விழா
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
4. காஞ்சீபுரம், கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா
காஞ்சீபுரம், கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா உறுதியானது.
5. காஞ்சீபுரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா
காஞ்சீபுரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதிகம் வாசிக்கப்பட்டவை