தீபாவளி தினத்தில் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டைக்காட்டிலும் ரூ.3 கோடி அதிகம்


தீபாவளி தினத்தில் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டைக்காட்டிலும் ரூ.3 கோடி அதிகம்
x
தினத்தந்தி 29 Oct 2019 5:00 AM IST (Updated: 29 Oct 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளியன்று ரூ.9¼ கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டைக்காட்டிலும் ரூ.3 கோடி அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது.

திருப்பூர்,

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டிக்கொடுக்கும் நிறுவனமாக டாஸ்மாக் உள்ளது. தீபாவளி, பொங்கல், புது வருடப்பிறப்பு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சாதாரண நாட்களை விட டாஸ்மாக் கடைகளின் மது விற்பனை அதிகமாக இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளிலும், டிக்கெட்டுக்காக சினிமா தியேட்டர்களிலும் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைப்போல் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளின் முன்புறம் மதுபானங்கள் வாங்க மதுப்பிரியர்கள் காத்திருப்பார்கள்.

தீபாவளி பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் படையெடுப்பு அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை மதுவுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் தொழிலாளர்கள் மது அருந்தி மகிழ்வது வாடிக்கை.

திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளியன்று மது விற்பனை ரூ.9¼ கோடிக்கு நடந்துள் ளது. அதன்படி பீர் வகைகள் 9 ஆயிரத்து 700 பெட்டிகளும், பிராந்தி மது வகைகள் 12 ஆயிரத்து 800 பெட்டிகளும் விற்பனையாகியிருக்கிறது. அதாவது பீர் வகை ரூ.1½ கோடிக்கும், பிராந்தி வகை ரூ.7¾ கோடிக்கும் விற்பனையாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு தீபாவளியன்று மாவட்டத்தில் 9 ஆயிரத்து 500 பெட்டிகள் பிராந்தி வகை மதுபானங்களும், 4 ஆயிரம் பெட்டிகள் பீர் வகைகளும் விற்பனையாகி இருக்கிறது. அதன்படி பார்த்தால் ரூ.6¼ கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது. கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு ரூ.3 கோடிக்கு அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story