சுஜித் உயிருடன் மீண்டு வரவேண்டி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு
குழந்தை சுஜித் உயிருடன் மீண்டு வரவேண்டி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
புதுக்கோட்டை,
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்குழாய் கிணற்றில் 2 வயதான குழந்தை சுஜித் கடந்த 25-ந் தேதி தவறி விழுந்தார். அந்த குழந்தையை மீட்கும் பணியில் தமிழக அரசு முழு வீச்சில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகிறது. பல முயற்சிகள் பலனலிக்காத நிலையில், ஓ.என்.ஜி.சி.யின், ரிக் எந்திரம் கொண்டு வரப்பட்டு குழந்தை விழுந்த ஆழ்குழாய் கிணற்றின் அருகே மீண்டும் ஒரு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
ரிக் எந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டும்போது, கடினமாக பாறை இருந்ததால், பள்ளம் தோண்டும்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரிக் எந்திரத்தால் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் போர்வேல் மூலம் 6 இடங்களில் துளையிடப்பட்டு, குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கும்மியடித்து
இந்நிலையில் குழந்தை சுஜித் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து உயிருடன் மீண்டு வர வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தி சுஜித் உயிருடன் மீண்டுவர வேண்டிக்கொண்டனர். தொடர்ந்து திருநங்கைகள் இறைவன் சுஜித்தை உயிரோடு மீட்டு தரவேண்டும் எனக்கூறி கும்மியடித்தும், குலவை போட்டும் அம்மனிடம் வேண்டிக்கொண்டனர்.

Related Tags :
Next Story