தஞ்சை மாவட்டத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை ஆறு, பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது
தஞ்சை மாவட்டத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. பலத்த இடி- மின்னலுடன் மழை பெய்தது. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. தொடர்ந்து 5 மணி வரை இதே நிலை நீடித்தது.
தண்ணீர் தேங்கியது
பின்னர் மழை இன்றி காணப்பட்டது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் 11.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மதியம் 2.30 மணி அளவில் மீண்டும் பலத்த மழை பெய்தது.
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி, திருவிடைமருதூர், அம்மாப்பேட்டை, செங்கிப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சையில் தாழ்வான பகுதியான அண்ணாசிலை, மேரீஸ்கார்னர், கோர்ட்டு சாலை உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.
குறைக்கப்பட்டது
டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களாக மழை நீடித்து வருவதால் ஆறு, பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பதும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காவிரி, வெண்ணாறுகளில் 8 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதேபோல் கல்லணைக்கால்வாயில் 2 ஆயிரத்து 600 கன அடி திறக்கப்பட்ட தண்ணீர் 2,421 அடியாக குறைக்கப்பட்டது.
மேலும் மேட்டூருக்கு அதிக அளவு தண்ணீர் வருவதால் அந்த தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 7 ஆயிரத்து 170 கன அடி திறக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயல்களில் தேங்கும் மழைநீர் வடிவதற்கு ஏதுவாக பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணம்
கும்பகோணத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் கும்பகோணம் பழைய பஸ்நிலையம், பாணாதுறை தெற்குவீதி, அண்ணாநகர், காசிராமன் தெரு, கர்ணகொல்லைத்தெரு, தாராசுரம், பட்டீஸ்வரம், மீன்மார்க்கெட், பாலக்கரை, நீதிமன்ற சாலை, பக்தபுரி தெரு ரவுண்டானா, காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். வயல்களில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை அளவு
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அய்யம்பேட்டை 64, மஞ்சளாறு 53, திருக்காட்டுப்பள்ளி 41, கும்பகோணம் 40, திருவையாறு 38, திருவிடைமருதூர் 33, பாபநாசம் 33, மதுக்கூர் 30, அணைக்கரை 30, பூதலூர் 30, குருங்குளம் 28, வல்லம் 28, ஒரத்தநாடு 25, ஈச்சன்விடுதி 20, வெட்டிக்காடு 20, நெய்வாசல் தென்பாதி 18, கல்லணை 16, பட்டுக்கோட்டை 15, பேராவூரணி 10, அதிராம்பட்டினம் 10, தஞ்சை 9.

Related Tags :
Next Story