திருச்சியில் பலத்த மழை கொட்டியது சாலையோர வியாபாரம் பாதிப்பு
திருச்சியில் பலத்த மழை கொட்டியது. இதனால், சாலையோர வியாபாரம் பாதிக்கப்பட்டது.
திருச்சி,
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த அழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்கள் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது.
திருச்சி மாநகரில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மழை பெய்தது. விடியும் வரை பரவலாக மழை பெய்தது. பின்னர் பகல் 12 மணி வரையிலும் சுட்டெரிக்கும் வகையில் வெயில் கொளுத்தியது. பிற்பகல் 1 மணிக்கு வானத்தில் கருமேகம் திரண்டு இருள் சூழ்ந்து மழை கொட்ட தொடங்கியது. பாத சாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லமுடியாத வகையில் மழை கொட்டியது. இடையில் நிற்பதும் மீண்டும் மழை பெய்வதுமாக மாலை வரையிலும் நீடித்தது. இரவிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது.
வியாபாரம் பாதிப்பு
திருச்சி மாநகரில் பெய்த மழையால் சாலையோர வியாபாரிகள், காந்தி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், வியாபாரம் சரிவர நடைபெற வில்லை. மேலும் மக்கள் நடமாட முடியாத வகையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரம் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சைக்கிளில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா, தில்லை நகர், உறையூர், சிந்தாமணி, ஸ்ரீரங்கம், டி.வி.எஸ். டோல்கேட், எடமலைப்பட்டி புதூர், சத்திரம், மலைக்கோட்டை, திருச்சி ஜங்ஷன், கண்டோன்மெண்ட், விமான நிலையம், பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. சில இடங்களில் மழைநீர் வீடுகளிலும் புகுந்தது. அவற்றை பாத்திரங்களில் எடுத்து வெளியே கொட்டினர்.
புறநகர் பகுதி
மேலும் திருச்சி மாநகரம் மட்டுமல்லாது புறநகர் பகுதியான மணப்பாறை, லால்குடி, சமயபுரம், டால்மியாபுரம், மண்ணச்சநல்லூர், முசிறி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பரவலாக மழை பெய்தது. இதுபோல் தா.பேட்டை அருகே உள்ள ஜெம்புநாதபுரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் 8-வது வார்டு பகுதியில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள வீதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

Related Tags :
Next Story