மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் போலீஸ் ஏட்டு திடீர் சாவு + "||" + Kovilpatti police die suddenly

கோவில்பட்டியில் போலீஸ் ஏட்டு திடீர் சாவு

கோவில்பட்டியில் போலீஸ் ஏட்டு திடீர் சாவு
கோவில்பட்டியில் போலீஸ் ஏட்டு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் கதிர்வேல்சாமி. இவருடைய மகன் மோகன் (வயது 37). இவர் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு மகேசுவரி (35) என்ற மனைவியும், தீபராஜ் (9) என்ற மகனும், லக்‌ஷனா (6) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலையில் மோகன் வேலைக்கு புறப்பட்டு செல்வதற்காக, தனது வீட்டில் குளியல் அறையில் குளிக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மோகனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் மோகனின் உடல், சொந்த ஊரான சுரைக்காய்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார், பொதுமக்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலையில் அங்குள்ள மயானத்தில் போலீஸ் மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு, மகன் தீபராஜ் தீ மூட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
2. கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. திண்டிவனத்தில் பரபரப்பு ஓய்வுபெற்ற ஆந்திரா அரசு அதிகாரி ரெயிலில் திடீர் சாவு - போலீசார் விசாரணை
ஓய்வுபெற்ற ஆந்திரா அரசு அதிகாரி ரெயிலில் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
4. சேலத்தில், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 2 கர்ப்பிணிகள் அடுத்தடுத்து சாவு
சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 2 கர்ப்பிணிகள் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
5. கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.