ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 2-ம் கட்ட லட்சார்ச்சனை விழா இன்று தொடங்குகிறது


ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 2-ம் கட்ட லட்சார்ச்சனை விழா இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 30 Oct 2019 10:30 PM GMT (Updated: 30 Oct 2019 5:23 PM GMT)

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 2-ம் கட்ட லட்சார்ச்சனை விழா இன்று தொடங்குகிறது.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. இக்கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் குருபகவான் கடந்த 29-ந் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்ததையொட்டி குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா கடந்த 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெற்றது.

குருபெயர்ச்சிக்கு பின்னர் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 7-ந் தேதி வரை 2-வது கட்ட லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. இதில் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.

Next Story