திருவள்ளூர் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது


திருவள்ளூர் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 6:59 PM GMT)

திருவள்ளூர் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த திருமழிசை பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு இருந்த கடைகளில் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 34), ஜெயராமன் (30) ஆகியோர் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் போலீசார் அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் இருவரும் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து வெள்ளவேடு போலீசார் விஜயகுமார், ஜெயராமன் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story