மாவட்ட செய்திகள்

நெமிலி அருகே, மழையால் அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது - கலெக்டர் நேரில் ஆய்வு + "||" + Near Nemely, The state school building collapsed due to rain The Collector In person Inspection

நெமிலி அருகே, மழையால் அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது - கலெக்டர் நேரில் ஆய்வு

நெமிலி அருகே, மழையால் அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது - கலெக்டர் நேரில் ஆய்வு
நெமிலி அருகே மழையால் இடிந்து விழுந்த கொல்லுமேடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பனப்பாக்கம், 

வேலூர் மாவட்டம் நெமிலி ஒன்றியம் எலத்தூர் கிராமம் கொல்லுமேடு பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியை தனலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். மிகவும் பழமையான பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு, சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலையும் மழை பெய்தது. அதன்காரணமாக மாவட்ட நிர்வாகம் 2-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது.

அதனால் கொல்லுமேடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. எலத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் காலை 10 மணியளவில் கொல்லுமேடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

விடுமுறை காரணமாக பள்ளியில் யாரும் இல்லாததால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இதுகுறித்து எலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் உடனடியாக நெமிலி தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மழையால் இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பள்ளி கட்டிடத்தை முழுவதும் இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கும் படியும், புதிய பள்ளி கட்டிடம் கட்டும்வரை பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து தற்காலிகமாக அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் படியும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், நெமிலி தாசில்தார் சதீஷ், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் புண்ணியகோட்டி, நெமிலி வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயராஜி, சம்பத்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
2. கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. சென்னையில் காலையில் சில இடங்களில் லேசான மழை
சென்னையில் இன்று காலை சில இடங்களில் லேசான அளவில் மழை பெய்துள்ளது.
4. மானாமதுரை பகுதியில் தொடர் மழை: செங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு - இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
மானாமதுரையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
5. மழையால் சாலைகள் சேதம், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தொண்டியில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.