மாவட்ட செய்திகள்

காருடன் குளத்துக்குள் மூழ்கிய தாத்தா, பேத்தியை காப்பாற்றிய டெம்போ டிரைவர் போலீசார்- பொதுமக்கள் பாராட்டு + "||" + Tempo driver rescues grandfather and granddaughter drowned in car

காருடன் குளத்துக்குள் மூழ்கிய தாத்தா, பேத்தியை காப்பாற்றிய டெம்போ டிரைவர் போலீசார்- பொதுமக்கள் பாராட்டு

காருடன் குளத்துக்குள் மூழ்கிய தாத்தா, பேத்தியை காப்பாற்றிய டெம்போ டிரைவர் போலீசார்- பொதுமக்கள் பாராட்டு
ஆரல்வாய்மொழி அருகே காருடன் குளத்துக்குள் மூழ்கிய தாத்தா- பேத்தியை டெம்போ டிரைவர் காப்பாற்றினார். அவரை போலீசார்- பொதுமக்கள் பாராட்டினர்.
ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் பூதப் பாண்டி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர். இவர், நேற்று மதியம் தன்னுடைய 2 வயது பேத்தி பிரதிப் ஷாவுடன் ஆரல்வாய்மொழி நோக்கி காரில் சென்று கொண்டிருந் தார். பிரதிப்ஷா காரின் முன் இருக்கையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.


செண்பகராமன்புதூர் அரு கே சென்றபோது பாக்கி யராஜின் மீது பிரதிப்ஷா விழுந்தார். இதனால் பாக்கிய ராஜ் நிலை தடுமாறினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த குளத்துக்குள் பாய்ந்தது.

தாத்தா- பேத்தியை காப்பாற்றினார்

அப்போது, அந்த வழியாக டெம்போ ஓட்டி வந்த ஒருவர், குளத்துக்குள் கார் ஒன்று பாய்ந்ததை கண்டு திடுக்கி ட்டார். கண் இமைக்கும் நேரத்தில் குளத்து தண்ணீரில் கார் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க தொடங்கியது. காருக் குள் இருந்த பாக்கியராஜ், தன்னுடைய பேத்தியை கையில் எடுத்துக் கொண்டு அபய குரல் எழுப்பினார். டெம்போ ஓட்டி வந்தவர், அவர்களை காப்பாற்ற மின்னல் வேகத்தில் செயல் பட்டார்.

குளத்துக்குள் குதித்து பாக்கியராஜ் கையில் இருந்த குழந்தையை முதலில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் பாக்கியராஜை, கா ரின் கதவு வழியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அவர்கள் கரை வந்து சேர்ந் தவுடன் காரை பார்த்தனர். அதற்குள் கார், குளத்துக்குள் மூழ்கி விட்டது.

கார் மீட்பு

தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் நடந்த சம்பவம் தொடர்பாக பாக்கி யராஜ் மற்றும் டெம்போ ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே குளத்து தண்ணீரில் மூழ்கிய காரை அப்பகுதி இளைஞர்கள் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

பின்னர் குளத்துக்குள் மூழ்கிய காரை மீட்க பொக் லைன் எந்திரம் வரவழைக் கப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் கார் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. அதேநேரத்தில் பாக்கியராஜின் செல்போன் மற்றும் பிரதிப்ஷா அணிந்திருந்த 2 பவுன் நகை ஆகியவை தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.

போலீசார் பாராட்டு

பாக்கியராஜின் மகள் சுபா. இவருடைய கணவர் ஆரல் வாய்மொழி ரெயில் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் உணவு சாப்பிடுவதற் காக தன் னுடைய மருமகனை அழைத்து வருவதற்காக பேத்தி பிரதிப்ஷாவுடன் காரில் ஆரல்வாய் மொழிக்கு பாக்கியராஜ் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

தனது உயிரையும் பொருட் படுத்தாமல் குளத்துக்குள் குதித்து 2 பேரை காப்பாற்றிய டெம்போ டிரைவர் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த மணிகண்டன் (30) ஆவார். இவர், செண்பக ராமன்புதூர் முன்னாள் வார்டு உறுப்பினர் ஆவார். அவரது இந்த துணிச்சலான செயலை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தவறவிட்ட ரூ.1¾ லட்சத்தை எடுத்து கொடுத்த 2 கைதிகளுக்கு சிறைத்துறை சூப்பிரண்டு பாராட்டு
புதுக்கோட்டை சிறைத்துறை பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தவறவிட்ட ரூ.1¾ லட்சத்தை எடுத்து கொடுத்த 2 கைதிகளை சிறைத்துறை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி பாராட்டினார்.
2. கொருக்குப்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
கொருக்குப்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.
3. அந்தியூர் அருகே, பொதுமக்கள் சாலை மறியல்
அந்தியூர் அருகே தார்சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ரெட்டை வாய்க்கால் பாலப்பணி முடிவடைவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ரெட்டை வாய்க்கால் பாலப்பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.