கல்லறை திருநாள் அனுசரிப்பு மறைந்தவர்களுக்கு கிறிஸ்தவர்கள் அஞ்சலி


கல்லறை திருநாள் அனுசரிப்பு மறைந்தவர்களுக்கு கிறிஸ்தவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 2 Nov 2019 10:45 PM GMT (Updated: 2 Nov 2019 6:58 PM GMT)

கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர்.

பெரம்பலூர்,

கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்கு சென்று அவர்களை நினைவு கூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள் சகல ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லறை தோட்டங்கள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டன. பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகேயுள்ள கல்லறை தோட்டத்தில் நேற்று கல்லறை களை கிறிஸ்தவர்கள் கழுவி, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி வைத்திருந்தனர். அப்போது வட்டார முதன்மை குரு அருட்திரு ராஜமாணிக்கம் தலைமை தாங்கி திருப்பலி நடத்தினார். அப்போது இறந்தவர்களின் இளைப்பாட்டிற்காக அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், கன்னியாஸ்திரிகள் மனமுருகி ஜெப புத்தகத்தை படித்து, பாடல்களை பாடி, பின்னர் கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்து மறைந்த உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே இறந்தவர்களின் கல்லறைகளில் புனித நீரை தெளித்து தீர்த்த ஆசிர்வாதம் முதன்மை குருவினால் வழங்கப்பட்டது. இந்த கல்லறை திருநாளில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் வைத்து கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

இதேபோல் அரியலூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏராளமானவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து வண்ணம் பூசி மலர்களால் அலங்காரம் செய்து அவர்களுக்கு பிடித்த உணவுகள், பொருட் களை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Next Story