கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Nov 2019 10:15 PM GMT (Updated: 2 Nov 2019 7:55 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஷோபனா (வயது 19). இவருக்கும், சுண்ணாம்புகுளம் அடுத்த வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சதிஷ்(22) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில், வெட்டுக்காடு கிராமத்தில் கணவரின் வீட்டில் இருந்த ஷோபனா நேற்று யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட ஷோபனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஆர்்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story