கடலூரில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதியுடன் அரசு பஸ் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்


கடலூரில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதியுடன் அரசு பஸ் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 9:36 PM GMT)

கடலூரில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதியுடன் அரசு பஸ்சை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்துக்குட்பட்ட கடலூர் மண்டலம் சார்பில் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதியுடன் அரசு பஸ் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு புதிய குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு பஸ்சை கடலூரில் இருந்து சென்னைக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ் கடலூரில் இருந்து புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னைக்கு தினந்தோறும் காலை 5 மணி மற்றும் மாலை 3 மணிக்கும் செல்லும். அதேபோல் சென்னையில் இருந்து காலை 9.20 மணி மற்றும் இரவு 7.50 மணிக்கு கடலூருக்கும் வந்து செல்லும். இந்த பஸ்சின் அனைத்து இருக்கைகளிலும் செல்போன் சார்ஜிங் செய்யும் வசதி உள்ளது. 3 அவசர வழி அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் ரூ.210

அனைத்து பல்புகளும் எல்.இ.டி. ஆகும். இது போன்ற பல்வேறு வசதிகள் இந்த பஸ்சில் உள்ளது. கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல டிக்கெட் கட்டணமாக ரூ.210 வசூலிக்கப்படுகிறது.

விழாவில் முன்னாள் நகரசபை துணை தலைவர் சேவல்குமார், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், விவசாய அணி காசிநாதன், மீனவரணி தங்கமணி, முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வெங்கடேசன், துணை மேலாளர் (தொழில்நுட்பம்) சேகர்ராஜ், துணை மேலாளர் ( இயக்கம்) முருகானந்தம், உதவி மேலாளர் சுந்தரம் (வணிகம்), உதவி மேலாளர் கமலக்கண்ணன் (சட்டம்), கிளை மேலாளர் சுந்தரராகவன், பஸ் நிலைய பொறுப்பாளர் தேவநாதன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story