மாவட்ட செய்திகள்

காரிமங்கலம் அருகே, மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + Near Karimangalam, Mariamman Temple broke untiyalai Jewelry, money robbery

காரிமங்கலம் அருகே, மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

காரிமங்கலம் அருகே, மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
காரிமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரிமங்கலம்,

காரிமங்கலம் அடுத்துள்ள பந்தாரஅள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 2010–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் பூசாரியாக கவரன் இருந்து வருகிறார். கடந்த 3–ந்தேதி பூசாரி கவரன் மாரியம்மனுக்கு பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று கிராமமக்கள் கோவில் வழியாக சென்றனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிராமமக்கள் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைக்கப்பட்ட உண்டயலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பணம், நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சம்பவம் 2–வது முறையாக இந்த கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பது அந்த பகுதி மக்களிடம் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மொடக்குறிச்சி அருகே, பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை
மொடக்குறிச்சி அருகே பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
2. கோட்டக்குப்பம் அருகே, தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோட்டக்குப்பம் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. விழுப்புரம், கல்வி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை-மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
விழுப்புரத்தில் கல்வி அதிகாரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
4. சத்துவாச்சாரியில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு - மர்மநபர்கள் கைவரிசை
வேலூர் சத்துவாச்சாரியில் தனியார் மருத்துவமனை டாக்டர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. தூத்துக்குடி, புதுக்கோட்டையில், 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
தூத்துக்குடி, புதுக்கோட்டையில் 2 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.