கழுத்தை அறுத்து வாலிபர் கொலை தனக்கு வைத்திருந்த மதுவை எடுத்து குடித்ததால் நண்பர் ஆத்திரம்
தனக்கு வைத்திருந்த மதுவை எடுத்து குடித்ததால் நண்பரின் கழுத்தை அறுத்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள நந்திவரம் நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 29). நந்திவரம் எழில் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (30), இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சீனிவாசனின் வீட்டில் உள்ள வராண்டாவில் சீனிவாசன் தனது நண்பர் சூர்யாவுடன் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது சீனிவாசன் தான் குடிப்பதற்காக மதுவை ஒரு டம்ளரிலும், நண்பர் சூர்யா குடிப்பதற்காக மற்றொரு டம்ளரிலும் மதுவை ஊற்றி வைத்துவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது தான் குடிப்பதற்காக ஊற்றி வைக்கப்பட்டு இருந்த மதுவை சூர்யா குடித்திருப்பது கண்டு ஆத்திரம் அடைந்தார்.
ஆத்திரத்தில் சீனிவாசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சூரியாவின் கழுத்தை அறுத்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்த சூர்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கைது
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். தனது மதுவை எடுத்து குடித்ததால் நண்பரை சீனிவாசன் கழுத்தை அறுத்து கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story