மாவட்ட செய்திகள்

சேலம் கோரிமேட்டில் பிளஸ்-1 மாணவி மர்ம சாவு போலீசார் விசாரணை + "||" + Police investigate mystery death of Plus-1 student

சேலம் கோரிமேட்டில் பிளஸ்-1 மாணவி மர்ம சாவு போலீசார் விசாரணை

சேலம் கோரிமேட்டில் பிளஸ்-1 மாணவி மர்ம சாவு போலீசார் விசாரணை
சேலம் கன்னங்குறிச்சியில் பிளஸ்-1 மாணவி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னங்குறிச்சி,

சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் ரமே‌‌ஷ், ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் தேவிஸ்ரீ(வயது 16). இவர் மணக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடம் முடிந்து அவர் வீட்டுக்கு திரும்பினார். பின்னர் அவர் தனது அறைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவரது அலறல் சத்தம் கேட்டது.


இந்த சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது உடல் கருகிய நிலையில் தேவிஸ்ரீ பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கன்னங்குறிச்சி போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதனிடையே போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில், தனது மகள் வீட்டில் விளக்கை எரிய விட ‘சுவிட்ச்’சை அழுத்திய போது மின்சாரம் தாக்கி பலியானதாக கூறி உள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போலீசார் தரப்பில் கூறும் போது, மாணவி தேவிஸ்ரீ மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இதனால் மாணவியின் சாவு மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் மாணவி எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா
நடிகர் சுஷாந்த் சிங் எழுதியதாக கூறப்படும் நன்றிகடன் பட்டவர்கள் பட்டியலை நடிகை ரியா சக்கரபோர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
2. வேலூரில் பெண் டாக்டர் மர்மச்சாவு போலீசார் விசாரணை
வேலூரில் பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
பணகுடியில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. விளையாட செல்போன் கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
விளையாட தனது அண்ணன் செல்போன் கொடுக்காததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பண மோசடி நடிகை ரியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் ரூ.15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக அவரது தந்தை அளித்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை நடத்தியது.