வேளாண் கல்லூரி வார்டனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் சிறையில் அடைப்பு
வேளாண் கல்லூரி வார்டனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் சிறையில் அடைப்பு.
தா.பேட்டை,
திருச்சியை அடுத்த துறையூர் அருகே கண்ணனூரில் இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 45) வார்டனாக வேலை செய்து வந்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த அப்துல்ஹக்கீம் (19) என்ற மாணவர் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி. வேளாண்மை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்தநிலையில் அப்துல்ஹக்கீம் சரியாக படிக்காமல், 8 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். அதுபற்றி அவருடைய பெற்றோருக்கு விடுதி வார்டன் தகவல் தெரிவித்துள்ளார். உடனே மாணவரின் தந்தை அப்துல்ரசாக் கல்லூரிக்கு வந்து தனது மகனை கண்டித்ததுடன், அதன் பிறகு தனது மகனிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர், நேற்று முன்தினம் வார்டன் வெங்கட்ராமனை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ஹக்கீமை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், அவர் துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story