மாவட்ட செய்திகள்

சேலத்தில் 2-வது நாளாக காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு + "||" + Fitness Choice for Guard Day 2 at Salem

சேலத்தில் 2-வது நாளாக காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு

சேலத்தில் 2-வது நாளாக காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
சேலம்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து பங்கேற்று தேர்வான 2,762 பேருக்கு உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். முதல் நாளில் கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் மற்றும் மார்பளவு அளவீடு செய்தல், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.


நேற்று 2-வது நாளாக காவலர் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க 700 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம், மார்பளவு போன்றவை அளவீடு செய்யப்பட்டது. பின்னர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில், கலந்து கொண்ட இளைஞர்கள், இலக்கை நோக்கி வேகமாக ஓடினர். முடிவில், தகுதியுள்ளவர்கள் மட்டும் அடுத்த தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேசமயம், தகுதியில்லாத இளைஞர்கள் தகுதியிழப்பு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2-வது நாளாக நடந்த காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வுகளை போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு கண்காணித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு- உடற்தகுதி தேர்வு
மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் பெரம்பலூரில் தொடங்கியது.
2. மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது
திருச்சியில் மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது.
3. உத்தர பிரதேசத்தில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற கும்பல் கைது
உத்தர பிரதேசத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. தஞ்சையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு 367 பேர் எழுதினர்
தஞ்சையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு நடந்த போட்டி தேர்வை 367 பேர் எழுதினர்.
5. ஜூனியர் கபடி: சென்னை அணி இன்று தேர்வு
ஜூனியர் கபடி போட்டிக்கான சென்னை அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளது.