மாவட்ட செய்திகள்

குலசேகரம் அருகே பரபரப்பு சமையல் அறையில் பிணமாக தொங்கிய புதுப்பெண் போலீசார் விசாரணை + "||" + Police investigating corpse hanging in a busy kitchen near Kulasekaram

குலசேகரம் அருகே பரபரப்பு சமையல் அறையில் பிணமாக தொங்கிய புதுப்பெண் போலீசார் விசாரணை

குலசேகரம் அருகே பரபரப்பு சமையல் அறையில் பிணமாக தொங்கிய புதுப்பெண் போலீசார் விசாரணை
குலசேகரம் அருகே சமையல் அறையில் புதுப்பெண் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குலசேகரம்,

குலசேகரம் அருகே தாழமூட்டுவிளை, அயக்கோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருக்கும், கேரள மாநிலம் எரிமேலி பகுதியை சேர்ந்த சோபனா (40) என்பருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு சோபனா, அயக்கோட்டில் உள்ள தனது கணவர் வீட்டில் தங்கியிருந்தார்.


கணவன்–மனைவி இடையே கடந்த சில வாரங்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், சோபனா மனமுடைந்து காணப்பட்டார்.

தூக்கில் பிணம்

நேற்று முன்தினம் இரவு மகேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற போது, சமையல் அறையில் சோபனா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள் புதுப்பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பிணத்தை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் தக்கலை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு, தனது கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2. மாயமான புதுமாப்பிள்ளை வனப்பகுதியில் தூக்கில் பிணமாக கிடந்தார் கொலையா? போலீசார் விசாரணை
கொல்லிமலையில் மாயமான புதுமாப்பிள்ளை வனப்பகுதியில் தூக்கில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. மாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை
குற்றச்செயல்களை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை.
4. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. கன்னியாகுமரி அருகே 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்? போலீசார் விசாரணை
கன்னியாகுமரி அருகே வடக்கு தாமரைகுளம் பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம் பிடித்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.