மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் 2 பெண்கள் புகார் + "||" + 2 women complain to police commissioner for defamation

சமூக வலைத்தளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் 2 பெண்கள் புகார்

சமூக வலைத்தளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் 2 பெண்கள் புகார்
சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை கோரி, 2 பெண்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தனர்.
திருச்சி,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி அனிதா(வயது 35), திருவாசி பகுதியை சேர்ந்த வேல்முருகனின் மனைவி மோனிஷா(33). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்யும் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகின்றனர். வீடு, வீடாக சென்று அந்த பொருளை பற்றி எடுத்துக்கூறி விற்று வருகின்றனர். இந்த நிலையில் அனிதா, மோனிஷா ஆகிய 2 பேரின் புகைப்படமும், ஒரு ஆடியோவும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தது. அந்த ஆடியோவும், புகைப்படமும் வைரலாக பரவியது. அதில் அனிதா, மோனிஷா ஆகிய 2 பேரும் ஒரு வீட்டின் படியில் அமர்ந்திருப்பது போல புகைப்படமும், ஆடியோவில் அந்த புகைப்படத்தில் உள்ள 2 பேரையும் சுட்டிக்காட்டி, 2 பேரும் மோசடியில் ஈடுபடுவதாகவும், பேசுவதற்காக செல்போன் கேட்பது போல நடித்து, அந்த போனில் இருந்து வேறொரு செல்போன் எண்ணிற்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்த பின், அந்த செல்போனில் உள்ள தகவல்கள் திருடப்படுவதாகவும் ஆடியோவில் பதிவாகி இருந்தது. வைரலாக பரவிய இந்த ஆடியோவை கேட்ட அனிதா, மோனிஷாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.


போலீஸ் கமிஷனரிடம் புகார்

இதைத்தொடர்ந்து அந்த புகைப்படத்தை பார்த்தபோது, திருச்சி திருவானைக்காவல் பகுதியில் பொருட்களை விற்பனை செய்துவிட்டு ஒரு வீட்டின் படிக்கட்டில் 2 பேரும் அமர்ந்திருந்த போது மர்மநபர் ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அவதூறாக வெளியிட்டது தெரியவந்தது. அந்த ஆடியோவில் உள்ள தகவலை கேட்டு அனிதா, மோனிஷா அதிர்ச்சிக்குள்ளாகினர்.

வாட்ஸ்-அப்பில் தங்களை பற்றி அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அனிதா, மோனிஷா ஆகியோர் நேற்று புகார் தெரிவித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதுகுறித்து அனிதா, மோனிஷா ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், “சமூக வலைத்தளத்தில் பரவிய இந்த தகவலால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியவில்லை. பணிக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. வாட்ஸ்-அப்பில் மேலும் இந்த தகவல் வந்தால் அதனை யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். தவறான தகவல் என மறு பதிவிடுங்கள்.

மேலும் இந்த ஆடியோவை பதிவு செய்து அனுப்பிய நபர், இந்த தகவல் தவறானது என மன்னிப்பு கேட்டு பதிவிட்டு அனுப்ப வேண்டும். அந்த நபரை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். அப்போது 2 பேரும் கண்ணீர் விட்டு அழுதனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகை வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது அவரது மனைவி போலீசில் புகார்
நடிகை வனிதாவை திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் மீது அவருடைய மனைவி, வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
2. 100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை
100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.23 கோடி மோசடி வியாபாரிகள் போலீசில் புகார்
திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.23 கோடிவரை மோசடி செய்யப்பட்டதாக போலீசில் வியாபாரிகள் நேற்று புகார் அளித்தனர்.
4. ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறியதாக புகார்: 100 மீட்டர் உலக சாம்பியன் கோல்மேன் இடைநீக்கம் - தடை விதிக்கப்பட வாய்ப்பு
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
5. தஞ்சையில், வீட்டிற்கு தீ வைப்பு: மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 பவுன் நகைகள் உருகியதாக பெண் புகார்
தஞ்சையில், வீட்டிற்கு தீ வைத்ததில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 20 பவுன் நகைகள் உருகியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.