சேலம் அருகே தறி தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
சேலம் அருகே தறி தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொண்டலாம்பட்டி,
சேலம் அருகே வேம்படிதாளம் திருவழிப்பட்டி போயர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). இவருடைய மனைவி ராஜாமணி (61). இருவரும் தறி தொழிலாளிகள். கிருஷ்ணன் வீட்டையொட்டி தறிக்கூடம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ராஜாமணி கன்னங்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். கிருஷ்ணன் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் கிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு தறிக் கூடத்திற்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் கிருஷ்ணன் வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த அரை பவுன் மோதிரம், வெள்ளி அரைஞாண் கொடி, ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
நேற்று காலையில் தறிக் கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து கிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த நகை, பணம் திருட்டு போனது தெரியவந்தது.
இது பற்றி கொண்டலாம்பட்டி போலீசில் ராஜாமணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story