கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
புதிதாக உதயமாகி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா முன்னேற்பாடுகள் பற்றி அதிகாரிகளுடன் கலெக்டர் அண்ணாதுரை நேற்று ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிதாக உதயமாகி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் அண்ணா துரை நேற்று ஆலோசனை நடத்தினார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள புதிய மாவட்ட தொடக்க விழாவையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது பற்றியும், விழா அரங்கினுள் அரசின் சாதனை விளக்க கண்காட்சி அமைப்பது பற்றியும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை ஆலோசனைகள் வழங்கினார்.
அதிகாரிகள்
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பிரபாகர் (பொது), கருணாநிதி (வேளாண்மை), கோட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story