நாகையில், 2-வது நாளாக பலத்த மழை புதிய கடற்கரையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது
நாகையில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் புதிய கடற்கரையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.
நாகப்பட்டினம்,
வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் நாகை புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. பலத்த மழை காரணமாக நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக நாகையில் பலத்த மழை பெய்தது. காலையில் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது. பின்னர் மதியம் 1.45 மணியளவில் பலத்த மழையாக பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.
நெற்பயிர்கள் மூழ்கும் நிலை
நாகை புதிய கடற்கரையில் தேங்கிய மழைநீர் குளம் போல் காணப்பட்டது. இதை தொடர்ந்து பொக்லின் எந்திரம் மூலம் மணலை தோண்டி மழை நீரை கடலில் கலக்க செய்தனர்.
இந்த மழை சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்தால் நெற்பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்படும் என்றனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-
நாகை -81.71, கொள்ளிடம் - 49.70, மயிலாடுதுறை -45, மணல்மேடு - 41.60,,சீர்காழி-39.60, திருப்பூண்டி- 39.40, தலைஞாயிறு - 23.40, தரங்கம்பாடி - 2, மாவட்டம் முழுவதும் மொத்தம் 322.40 மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

Related Tags :
Next Story