குழுமூர் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் இளைஞர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு
குழுமூர் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் இளைஞர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள குழுமூர் கிராமத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் தங்கள் கிராமத்திற்கு தேவையான பல்வேறு வசதிகளை செய்து வருகின்றனர். அதில் ஒன்றாக சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் புல் செடிகளை அகற்றி அந்த இடங்களில் வேம்பு, இலுப்பை, ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இதனால் சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளில் தேங்கும் தண்ணீரால் உருவாகும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் கொசுக்கள் அழிக்கப்படுகிறது. மேலும் வீட்டுக்கு ஒரு மரக்கன்று கொடுத்து வளர்க்குமாறு கூறுகின்றனர். இதனால் கிராமம் முழுவதும் பசுமையாக மாறி சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் இருக்கும்.
பசுமை கிராமமாக...
இதைப்போல் மற்ற ஊர் இளைஞர்களும் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என இந்த கிராமத்து இளைஞர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இச்செயலில் ஈடுபட்ட கிராமத்து இளைஞர்களை சமூக ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
தங்கள் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பது பற்றி அந்த இளைஞர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் சாலையோரம் உள்ள குப்பையால் பல்வேறு பிரச்சினை உருவாகி வருகிறது. இதனை போக்க நாங்கள் ஒரு முடிவு செய்து தினந்தோறும் எங்களால் முடிந்த அளவு மரக்கன்று நட்டு அதை பராமரித்து வருகிறோம். இதனால் எங்கள் கிராமம் பசுமை கிராமமாக மாறும். இன்னும் அதிக அளவில் மரக்கன்றுகள் இருந்தால் மற்ற கிராமங்களிலும் நடுவோம். நடுவதற்கு மரக்கன்றுகள் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதற்கு அரசு சார்பில் மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story