பொய் வழக்கு போட்டு கேவலப்படுத்துகிறார்கள்: ‘என்னை கருணை கொலை செய்து விடுங்கள்’ வாள்சண்டை வீரர் மனு
பொய் வழக்குகள் போட்டு கேவலப்படுத்துவதால் தன்னை கருணை கொலை செய்து விடுங்கள் என கலெக்டரிடம் வாள்சண்டை வீரர் மனு அளித்தார்.
நாகர்கோவில்,
நான் பொதுமக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடி வந்ததால் போலீசாா் என் மீது பொய் வழக்குகளை போட்டார்கள். அந்த வழக்குகளை சட்டப்படியாக கோர்ட்டில் நடத்தி வருகிறேன். இந்த நிலையில் தற்போது திருவட்டார் போலீசார் என்னை நிரந்தரமாக ஜெயிலில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர். ஏன் எனில் எங்கள் ஊரை சேர்ந்த 7 இளைஞர்களிடம் தலா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வாங்கிக்கொண்டு அதே பகுதியை சேர்ந்த கணவன்-மனைவி ஆகிய 2 பேரும் மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சென்ற பிறகு 7 பேரும் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 13-ந் தேதி கணவன்-மனைவியை திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
பரிந்துரை
பின்னர் ஊர் பொதுமக்களுடன் நானும் போலீஸ் நிலையம் சென்றேன். அப்போது என் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள். தற்போது நான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். நான் சித்ரவதைக்கு ஆளானது பற்றி மனித உரிமைகள் ஆணையத்துக்கும், கலெக்டருக்கும் புகார் மனுக்கள் அளித்துள்ளேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொய் வழக்குகள் ேபாட்டு கேவலப்படுத்துவதை விட கருணை கொலை செய்து விடுங்கள்.இதற்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story